பல்பில் ரகசிய கேமரா.. பெண்ணை வைத்து பாலியல் நாடகம் - வசமாக சிக்கிய பா.ஜ.க தலைவர்!
பெண் ஒருவரை வைத்து பாலியல் நாடகம் ஆடிய பா.ஜ.க தலைவர் கைதாகியுள்ளார்.
ஏமாற்றிய பெண்
மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் ஜவுளிக்கடை நடத்திவபவர் தீபக் ஜெயின், இவருடன் சமூக ஊடகம் மூலம் பெண் ஒருவர் அறிமுகமானார். இவர்கள் அண்ணன் தங்கை போல் பழகி வந்தனர், அப்பொழுது அந்த பெண் அவரிடம் ரூ.5500 கடனாக வாங்கியுள்ளார்.
அதனை திருப்பி தருமாறு அவர் கேட்டுள்ளார், அப்பொழுது அப்பெண் வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அவர் வீட்டிற்கு வந்ததும், டீ போட்டு கொடுத்துள்ளார், அதனை குடித்ததும் அவர் சில நிமிடங்களில் மயங்கியுள்ளார்.
அதில் அவர் மயக்கமருந்து கலந்து கொடுத்ததாக தெரியவந்துள்ளது. மயக்கத்தில் இருந்த அவருடன் சேர்ந்து நெருக்கமாக புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்துள்ளார்.
6 பேர் கைது
இந்நிலையில், அந்த பெண் தீபக் ஜெயினின் நண்பருக்கு அந்த புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தீபக் ஜெயின் காவல் நிலையம் சென்று தனக்கு டீயில் போதை மருந்தை கலந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்துள்ளதாகவும். இதுகுறித்து கேட்டதற்கு, 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், குற்றம் சாட்டப்பட்ட பெண், அவரது கணவர் தேவேந்திர ஜடான் ஆகியோரையும், இந்த பாலியல் மோசடிக்கு தலைவனாக செயல்பட்ட உள்ளூர் பாஜக தலைவர் ராம் சோனி என்பவரையும், இதற்கு உடந்தையாக மேலும் மூன்று பேர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.
வீட்டு பல்பின் ஹோல்டரில் மறைத்து வைக்கப்பட்ட கேமராவைக் கொண்டு இது போன்ற ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளதைக் கண்டறிந்துள்ள போலீஸார் அந்த கேமரா, ஆபாச வீடியோக்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பிற உபகரணங்களையும் அந்த பெண்ணின் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.