மாடல் அழகியை காரில் வைத்து சீரழித்த கொடூரர்கள் - வெளியான திடுக்கிடும் தகவல்
கேரளாவில் மாடல் அழகி ஒருவரை இரவு முழுவதும் காரில் வைத்து 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பார்ட்டி முடிந்து அழகியை துாக்கிய நண்பர்கள்
காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் கொச்சி, காக்கநாடு பகுதியில் தங்கி இருந்து மாடலிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இளம் பெண்ணை அவரது பெண் தோழி அழைத்துக் கொண்டு கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 நண்பர்கள் வந்துள்ளனர். இவர்களை மாடல் அழகிக்கு முன்பே தெரியும் என்று கூறப்படுகிறது. பார்ட்டியில் 3 பேரும் மது குடித்துள்ளனர்.
மாடல் அழகி ஒரு கட்டத்திற்கு மேல் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அவரை வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி 3 பேரும் தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அவரின் தோழியான ராஜஸ்தான் பெண் அவர்களுடன் செல்லாமல் வேண்டுமென்றே அந்த ஹோட்டலில் இருந்துள்ளார்.
விடிய விடிய காரில் உல்லாசம்
பின்னர் 3 ஆண் நண்பர்களுடன் மாடல் அழகியை காரில் வைத்துக் கொண்டு நகரைச் சுற்றி வந்துள்ளனர். விடிய விடிய காரில் வைத்துக் கொண்டு மாடல் அழகியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அந்த இளம் பெண்ணை வீட்டின் அருகில் விட்டுச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் மாடல் அழகியை மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாடல் அழகி கொடுத்த புகாரின் பேரில் மாடல் அழகியை கடத்தி சென்ற காரை கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர்.
பின்னர் ராஜஸ்தான் பெண் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.