எக்ஸ் உடன் தகாத உறவு... பாதி எரிந்த நிலையில் கணவர் உடல் - ஸ்கெட்ச் போட்ட மனைவி!

Tamil nadu Attempted Murder Relationship Crime
By Sumathi Sep 15, 2022 06:31 AM GMT
Report

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, அவரது மனைவியே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆண் சடலம் 

தர்மபுரி, நரசிபுரம் கிராமம் அருகே உள்ள சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றிய பெரும்பாலை காவல் நிலைய போலீசார் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எக்ஸ் உடன் தகாத உறவு... பாதி எரிந்த நிலையில் கணவர் உடல் -  ஸ்கெட்ச் போட்ட மனைவி! | Woman Arrested For Murdering Her Husband

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் சோம்பட்டியை சேர்ந்த மணி(30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பென்னாகரத்துக்கு சென்று மணியின் மனைவியான அம்சவள்ளியிடம் (24) மணி எங்கிருக்கிறார் என விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணை 

அதற்கு அம்சவள்ளி, தனது கணவரை ஒரு வாரமாக காணவில்லை என்றும், அவரை தேடிதான் அலைந்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் மனைவியில் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

எக்ஸ் உடன் தகாத உறவு... பாதி எரிந்த நிலையில் கணவர் உடல் -  ஸ்கெட்ச் போட்ட மனைவி! | Woman Arrested For Murdering Her Husband

அதில் முதலில் சமாளிக்கும்படியாக பதிலளித்த அம்சவள்ளி, பின்னர் என்ன நடந்தது என்பதை திடுக்கிடும் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதில், எனது கணவருக்கும், எனக்கும் திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. டெம்போ டிரைவராக இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தான் எனது கணவர் வீட்டுக்கு வருவார்.

தகாத உறவு

இதனால் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளேன். தனிமையில் இருந்து விடுபடுவதற்காக எனது கல்லூரிக் காதலன் சந்தோஷிடம்(25) போனில் பேச ஆரம்பித்தேன். தொடர்ந்து பேசி வந்ததால் சந்தோஷ் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. பின்னர் இருவரும் பல முறை தனிமையில் இருந்துள்ளோம்.

இந்த விஷயம் எனது கணவர் மணிக்கு அண்மையில் தெரியவந்தது. இதுகுறித்து அவர் என்னிடம் கேட்டு அடித்து உதைத்தார். மேலும், சந்தோஷ் உடனான பழக்கத்தை விட்டுவிடுமாறும் கூறினார். இதனால் சந்தோஷும், நானும் சேர்ந்து எனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.

எரித்து கொலை 

அதன்படி, கடந்த வாரம் நள்ளிரவு சந்தோஷும், அவரது நண்பர் லோகேஷும் எனது வீட்டுக்கு வந்து எனது கணவரை அடித்துக் கொன்றனர். பின்னர், அவரது உடலை நரசிபுரம் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர் என தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அம்சவள்ளி, அவரது கள்ளக்காதலன் சந்தேோஷ், அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.