துணை முதல்வரின் மனைவி -2 வருடமாக ஆபாச டார்ச்சல் கொடுத்த பெண்!

Maharashtra Crime
By Sumathi Sep 14, 2022 08:47 AM GMT
Report

துணை முதல்வர் மனைவிக்கு 2 ஆண்டுகளாக இணையத்தில் ஒரு பெண் ஆபாச கருத்துக்களை அனுப்பி தொல்லை தந்துள்ளார்.

அம்ருதா ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ். இவரது மனைவி அம்ருதா(43). இவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கணக்கு வைத்துள்ளார்.

துணை முதல்வரின் மனைவி -2 வருடமாக ஆபாச டார்ச்சல் கொடுத்த பெண்! | Woman Arrested For Defaming Amruta Fadnavis

கடந்த 2 ஆண்டுகளாக அம்ருதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய, ஆபாசமான கருத்துக்கள் சில கணக்குகளால் அனுப்பப்பட்டு வந்தன. இது குறித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆபாச டார்ச்சல்

அதில், ஸ்மிருதி பன்சால்(50) என்ற அந்த பெண் அம்ருதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெவ்வேறு போலி ஃபேஸ்புக் கணக்குகள் மூலம் பதிவு செய்துள்ளது தெரிய வந்தது.

துணை முதல்வரின் மனைவி -2 வருடமாக ஆபாச டார்ச்சல் கொடுத்த பெண்! | Woman Arrested For Defaming Amruta Fadnavis

ஸ்மிருதி பன்சால் வெவ்வேறு பெயர்களில் ஃபேஸ்புக்கில் போலியாக 53 கணக்குகளை உருவாக்கியுள்ளார். மேலும், 13 மெயில் கணக்குகளையும் உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் தொடர்ந்து 2 வருடங்களாக ஆபாச, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.