சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் - கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Sexual harassment Child Abuse Crime
By Sumathi 2 மாதங்கள் முன்

17 வயது சிறுவனுக்கு, இளம்பெண் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

நாகப்பட்டினம், வேளாங்கண்ணியை அடுத்த ஆலமழையைச் சேர்ந்தவர் 19 வயது பெண். இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் - கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்! | Woman Arrested After Sexual Relationship Minor Boy

தொடர்ந்து சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் மீது புகார் அளித்தார்.

பெண் கைது

அதன் அடிப்படையில், நடைபெற்ற விசாரணையில் சிறுவனிடம் அந்த பெண் பாலியல் உறவு வைத்துக்கொண்டு கர்ப்பமடைந்தது தெரியவந்தது. அதன்பின், 19 வயது பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் - கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்! | Woman Arrested After Sexual Relationship Minor Boy

தற்போது நாகை அரசு தலைமை மருத்துவனையில் அந்தப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.