இதய சிகிச்சைக்கு சென்ற பெண்; கை அகற்றம் - தவறான சிகிச்சையென கதறும் கணவன்!
மருத்துவர்களின் கவனக்குறைவால் பெண்ணின் கை அகற்றப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கை அகற்றம்
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத். இவரது மனைவி ஜோதி (32) மார்பு வலி காரணமாக கடந்த 15-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஞ்சியோ செய்ததில் இதய ரத்தநாள அடைப்புகள் பெரிய அளவில் இல்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால், ரத்த உறைதல் காரணமாக, வலது கை மற்றும் இரண்டு கால்கள் மிகவும் மோசமடைந்து கருப்பு நிறத்தில் மாறியுள்ளன.
அமைச்சர் விளக்கம்
இதனால், அப்பெண்ணின் வலது கையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்நிலையில், " இதய பரிசோதனைக்காக வந்தால், கை, கால்களை அகற்றுகின்றனர். மருத்துவர்கள், தவறான மருந்தையோ அல்லது கவனக்குறைவான சிகிச்சையையோ அளித்துள்ளனர். எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்" என அப்பெண்ணின் குற்றம்சாட்டியுள்ளார்.
உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனை சென்று அந்த பெண்ணை நேரில் சந்தித்தார். தொடர்ந்து ரத்த நாள் அடைப்பின் காரணமாகத்தான் அவரை சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம். சிகிச்சையில் தவறு நடந்திருந்தால் நிரூபிக்கலா. முழு ஒத்துழைப்பி அளிக்க தாயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.