வறுமையின் பிடியில் பிரபல காமெடி நடிகர் - கட்டை விரல் அகற்றம்

Tamil Cinema Diabetes Tamil Actors
By Thahir Jun 15, 2023 05:23 AM GMT
Report

வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் பிரபல காமெடி நடிகர் பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் சர்க்கரை நோயால் அகற்றப்பட்டுள்ளது.

வறுமையில் வாடும் நடிகர் 

வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் பாவா லட்சுமணன்.  நடிகர் சரத்குமார் நடித்த மாயி திரைப்படத்தில் காமெடி காட்சி ஒன்றில் “வா மா மின்னலு” என்ற காட்சி இன்று வரை அனைவரையும் புன்னகையில் ஆழ்த்தி வருகிறது.

சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானமின்றி தவித்து வரும் பாவா லட்சுமணன், சக்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

comedian bava lakshmanan big toe removal

கட்டை விரல் அகற்றம் 

இந்த சக்கரை நோயின் தாக்கம் அதிகமானதால் சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பிரபலமான நடிகர்கள் பலர், வருமானமின்றி மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வரும் நிலைமை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.