யாரு அது நம்மள மாதிரியே இருக்கா? - சத்தியமா அது நான் இல்லை: ரசிகர்கள் அதிர்ச்சி
மதுரையில் சாலையோர கையேந்தி பவனில் தினமும் சாப்பிட்டு கொண்டிருந்தவரை பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பிரபல காமெடி நடிகர் லட்சுமணன் மாயி திரைப்படத்தில் வாமா மின்னல் வசனத்தை பேசி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர்.
இவரை போன்றே மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் ஒருவர் தினமும் உணவு உண்டு செல்கிறார். அவரது பெயர் ராமன். தினமும் இவரை கண்ட பொதுமக்கள், அவரை லட்சுமணன் என்றும், கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படுகிறார் என்று நினைத்தும் அவரை கடந்து செல்கின்றனர்.
உண்மை என்னவோ அவர் லட்சுமணனின் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரர் ஆவார். இவர் வெள்ளை ரோஜா என்ற இசைக்குழுவை நடத்தி வருகிறார். இந்த உண்மையை உணர்ந்த பொதுமக்கள் இரட்டை பிறவிகளா என ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.