கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் ஓடிய பெண் - குழந்தைக்கு நேர்ந்த கொடுமை!
கணவரை விட்டுவிட்டு பெண் மாமனாருடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் சென்றுள்ளார். அவருக்கு 1 வயதான குழந்தை ஒன்று உள்ளது.
தொடர்ந்து, இச்சம்பவத்தால் குழந்தையை தாயிடம் கொடுக்காமல் அதன் தந்தையிடம் ஒப்படைக்க மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. உடனே, இதனை எதிர்த்து குழந்தையின் தாய் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பரிதவித்த குழந்தை
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அருண், குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது தாயின் உரிமை. தாய்ப்பால் கொடுப்பதும், தாய்ப்பால் ஊட்டப்பட வேண்டியதும் அரசியலமைப்பு சட்டம் 21-வது பிரிவின் கீழ் வாழும் உரிமைக்கான அம்சங்கள்.
குழந்தையின் நலனையே ஆணையம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அதன் தாய் வேறு ஒருவருடன் வசிப்பதை குறித்து கவலைப்பட்டிருக்கக்கூடாது எனக் கூறி குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.