7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Uttar Pradesh Death
By Sumathi Aug 30, 2024 05:55 AM GMT
Report

 8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓநாய் அச்சுறுத்தல்

உத்தர பிரதேசம், பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்றுள்ளது.

7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்! | Wolves That Killed 8 People In Uttar Pradesh

ஓநாய் கூட்டங்களால் சுமார் 30 கிராம மக்கள் தூக்கமின்றி தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஓநாய்களைப் பிடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆபத்தான 23 வகைகள்; மனித உயிரை அச்சுறுத்தும் நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு!

ஆபத்தான 23 வகைகள்; மனித உயிரை அச்சுறுத்தும் நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு!

8 பேர் பலி

இதனையடுத்து கிராமத்திற்குள் 2 ஓநாய்கள் சுற்றி திரிவது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினர் வைத்த கூண்டில் ஓநாய் ஒன்று சிக்கியுள்ளது.

7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்! | Wolves That Killed 8 People In Uttar Pradesh

தற்போது ஓநாய்களில், எஞ்சியவற்றை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.