ஆபத்தான 23 வகைகள்; மனித உயிரை அச்சுறுத்தும் நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு!

Delhi Government Of India
By Swetha Mar 15, 2024 06:16 AM GMT
Report

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 23 வகை நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது.

 நாய்கள் வளர்க்க தடை

நாட்டின் பல பகுதிகளில் நாய்கள் கடித்து மக்கள் உயிரிழக்கும் சம்பவம் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.

ஆபத்தான 23 வகைகள்; மனித உயிரை அச்சுறுத்தும் நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு! | 23 Dangerous Dog Breed Banned In India

குறிப்பாக, வெளிநாட்டு நாய்கள் மிகவும் மூர்க்கத்தனமாக இருப்பதால் இம்மாதிரியான சம்பவங்கள் நிகழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து, விலங்கு நல ஆர்வலர்கள், நிபுணர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

நிபுணர்கள் அளித்த பரிந்துரையை வைத்து வெளிநாட்டு ரகம் உள்பட மிகவும் ஆபத்தான 23 வகை நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெற்றியில் வழிந்த ரத்தம்; வீடு திரும்பிய மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?

நெற்றியில் வழிந்த ரத்தம்; வீடு திரும்பிய மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?

அதிரடி உத்தரவு

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசும் அனுப்பிய உத்தரவு அறிக்கையில், வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

ஆபத்தான 23 வகைகள்; மனித உயிரை அச்சுறுத்தும் நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு! | 23 Dangerous Dog Breed Banned In India

இதனால், மிகவும் மூர்க்கத்தனமாக செயல்படும் 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே வளர்க்கப்படும் இந்த வகை நாய்களின் இனப்பெருக்கம் நடைபெறாமல் இருக்க, அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட நாய் வகைகளை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் வழங்கக் கூடாது  என்று குறிப்பிட்டுள்ளது. 

ஆபத்தான 23 வகைகள்; மனித உயிரை அச்சுறுத்தும் நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு! | 23 Dangerous Dog Breed Banned In India

பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட், காகசியன் ஷெப்பர்ட், தென் ரஷ்ய ஷெப்பர்ட், டோர்ன்ஜாக், ஜப்பானிய டோசா மற்றும் அகிதா, மாஸ்டிப்ஸ், ராட்வீலர், டெரியர்ஸ், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ காவலர், கேன் கோர்சோ, பேண்டாக் ஆகிய வகைகள் தடை செய்யப்பட்டுள்ளது.