Saturday, Jul 19, 2025

மனிதர்களை கொடூரமாக வேட்டையாடும் ஓநாய்கள்..7 குழந்தைகள் பலி - நடுங்கும் கிராம மக்கள்!

Uttar Pradesh India Death
By Swetha a year ago
Report

ஓநாய்களால் 7 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓநாய்கள்..

உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஓநாய் கூட்டங்களால் சுமார் 30 கிராம மக்கள் தூக்கமின்றி அஞ்சி நடுங்குகின்றனர்.

மனிதர்களை கொடூரமாக வேட்டையாடும் ஓநாய்கள்..7 குழந்தைகள் பலி - நடுங்கும் கிராம மக்கள்! | Wolves Killed 8 People In Up 30 Villages In Fear

ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஓநாய்களைப் பிடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை; 10 மணி நேர போராட்டம் - பயத்தில் காருக்குள் சிக்கிய 5 பேர் மீட்பு!

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை; 10 மணி நேர போராட்டம் - பயத்தில் காருக்குள் சிக்கிய 5 பேர் மீட்பு!

குழந்தைகள் பலி 

ஓநாய்களை பிடிக்க ஆங்காங்கே பொறிகள், கூண்டுகளை வைத்துள்ள வனத்துறையினர், தெர்மல் டிரோன்கள் மூலம் அவற்றை கண்டறிந்து பிடித்து வருகின்றனர். அதை தொடர்ந்து, கண்கானித்தப்போது, கிராமத்திற்குள் 2 ஓநாய்கள் திரிவது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதர்களை கொடூரமாக வேட்டையாடும் ஓநாய்கள்..7 குழந்தைகள் பலி - நடுங்கும் கிராம மக்கள்! | Wolves Killed 8 People In Up 30 Villages In Fear

இதுவரை 3 ஓநாய்கள் பிடிப்பட்டுள்ளதாக தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியே தூங்குவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், வனத்துறையினர் வைத்த கூண்டில் ஓநாய் ஒன்று சிக்கியுள்ளது. 30 கிராம மக்களை அச்சுறுத்திய ஓநாய்களில், எஞ்சியவற்றை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.