மக்களை அச்சுறுத்திய சிறுத்தை; 10 மணி நேர போராட்டம் - பயத்தில் காருக்குள் சிக்கிய 5 பேர் மீட்பு!
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.
அச்சுறுத்திய சிறுத்தை
திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. அந்த இடத்தில் ஒருவராது வீட்டின் அருகில் சிறுத்தை ஒன்று நடமாடியதாக சிலர் பார்த்து உள்ளனர். இது குறித்தது வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பரபரப்பான நகர பகுதியில் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சிறுத்தை திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள மேரி இம்மாகுலேட் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில்,
சிறுத்தை நுழைந்துவிட்டதாக செய்தி பரவியது.உடனே ஆங்காங்கே வெளியில் நடமாடியவர்கள் அலறியடித்து அறைகளுக்குள் சென்றனர். மாணவர்களும் வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்டனர். பள்ளியில் மர வேலைகள் செய்து கொண்டிருந்த கோபால் என்ற 68 வயது முதியவர், பலரின் எச்சரிக்கையை மீறி,
5 பேர் மீட்பு
தனது சட்டையை மட்டும் எடுத்து வந்துவிடுகிறேன் என சென்றுள்ளார். அப்போது, மறைந்திருந்து பாய்ந்த சிறுத்தை முதியவரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பியது. இதில் காயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறையினரின் கண்ணில் பாடத்த சிறுத்தை, பள்ளியின் அருகில் உள்ள கார் ஷெட் ஒன்றில் சிறுத்தை பதுங்கியது. கார் ஷெட்டுக்குள் சிறுத்தை வருவதை பார்த்த 5 பேர், அங்கிருந்த கார்களுக்கு ஏறி அமர்ந்து கொண்டனர்.
ஒரு காரில் 4 பேரும், மற்றொரு காரில் ஒருவரும் என 5 பேர் கார்களுக்குள் சிக்கினர். சுமார் 6 மணிநேரத்திற்கு பின் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.