கண்டதும் சுட முதல்வர் உத்தரவு - குழந்தைகளுக்கு அரங்கேறும் கொடூரம்!
ஓநாய்களை கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓநாய் தாக்குதல்
உத்தரப் பிரதேசம், பராய்ச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது. அப்பகுதியைச் சுற்றியுள்ள 35 கிராமங்களில் ஓநாய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 45 நாட்களில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என ஒன்பது பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதுவரை 6 ஓநாய்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அதில் நான்கு பிடிக்கப்பட்டன.
முதல்வர் உத்தரவு
மீதமுள்ள ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ‘ஆபரேஷன் பேடியா’ என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், ,இதுதொடர்பாக பேசியுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,
“ஓநாய்களை நடமாட்டத்தை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அதேநேரம் அரசு நிர்வாகத்தின் காவல் துறை, வனத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்பு என அனைத்து துறையும் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.