கொடூரமாக பாலியல் வன்கொடுமை: ரஷ்ய வீரர்களுக்கு மனைவிகள் சப்போர்ட் - பகீர்!
ரஷ்ய வீரர்களை, அவர்களின் மனைவிகள் பாலியல் வன்கொடுமை செய்ய ஊக்குவிப்பதாக ஜெலன்ஸ்கி மனைவி தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தொடங்கி இன்றளவும் முடிந்த பாடில்லை. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளவில்லை. போரின் யுக்திகளாக ரஷ்யா, வயாகரா, பாலியல் வன்கொடுமை என மோசமான நிகழ்வுகளை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில், லண்டனில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், ``பாலியல் வன்முறை என்பது ஒருவரின் மீதான ஆதிக்கத்தை நிரூபிப்பதற்கான கொடூரமான, மிருகத்தனமான வழியாகும்.
உக்ரேனியப் பெண்கள்
அதனால், பாலியல் வன்கொடுமையை ரஷ்யப் படைகள் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. அதனால்தான், அவர்கள் இத்தகைய குற்றத்தை வெளிப்படையாகச் செய்கிறார்கள். ரஷ்ய படைவீரர்கள் இதைப் பற்றி மிகவும் வெளிப்படையாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்.
நாங்கள் கைப்பற்றிய தொலைபேசி உரையாடல்களிலிருந்து, அவர்கள் இதைப் பற்றி தங்கள் உறவினர்களுடன் பேசுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டோம். உண்மையில், ரஷ்ய படைவீரர்களின் மனைவிகள் 'போ, உக்ரேனியப் பெண்களைப் வன்கொடுமை செய்.
ஆனால், அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளாதே, என்னிடம் சொல்லாதே' என்று பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கிறார்கள். எனவே, இதை ஒரு போர்க் குற்றமாக அங்கீகரிப்பதும், குற்றவாளிகள் அனைவரையும் பொறுப்புக் கூறுவதும் மிகவும் முக்கியமானது" எனத் தெரிவித்தார்.