கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து தந்த மனைவி - வெளியான திடுக்கிடும் தகவல்!

United States of America Crime
By Swetha Jul 01, 2024 12:48 PM GMT
Report

மனைவி கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

 சோடாவில் விஷம் 

அமெரிக்காவின் மிசவுரி பகுதியை சேர்ந்தவர் மிச்செலே ஒய் பீட்டர்ஸ்(47). இவர் தனது கணவருக்கு கொடுத்த சோடாவில் விஷம் கலந்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த பின்னணி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து தந்த மனைவி - வெளியான திடுக்கிடும் தகவல்! | Wives Mix Poison In Soda And Gives To Her Husband

இவரது கணவரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அதனை கொண்டாட பீட்டர்ஸ், விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கணவரும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கு பாராட்டு எதுவும் கூறவில்லை.

இதனால் கடுமையாக கோபமடைந்த மனைவி பீட்டர்ஸ், கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்து விட்டார். அதனை அவருடைய கணவர் வாங்கி குடித்தபோது, முதலில் சுவை வேறுபட்டு இருந்துள்ளது. எனினும், அதனை புறந்தள்ளி விட்டு சோடாவை குடித்திருக்கிறார். சி.சி.டி.வி. காட்சியை சந்தேகத்தின்பேரில் பார்த்தபோது,

ஜூஸில் விஷம் கலந்து காதலனைக் கொன்ற கொடூரம் - கிரீஷ்மாவுக்கு ஜாமீன்!

ஜூஸில் விஷம் கலந்து காதலனைக் கொன்ற கொடூரம் - கிரீஷ்மாவுக்கு ஜாமீன்!

திடுக்கிடும் தகவல்

பிரிட்ஜில் இருந்து மனைவி சோடாவை எடுப்பதோடு, வீட்டில் இருந்த களைக்கொல்லி பாட்டிலையும் எடுத்து சென்றது தெரியவந்தது. பின்னர் சிறிது நேரத்தில் இரண்டு பொருட்களையும் எடுத்த இடத்தில் பீட்டர்ஸ் வைத்து விட்டார். குடித்தபிறகு அவர் மனைவியிடம் சென்று, தனக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லியிருக்கிறார்.

கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து தந்த மனைவி - வெளியான திடுக்கிடும் தகவல்! | Wives Mix Poison In Soda And Gives To Her Husband

ஆனால் அதற்குள் மனைவியோ, உங்களுக்கு கொரோனா வந்திருக்க கூடும். அதனால், குழந்தைகளிடம் இருந்து தள்ளி இருங்கள் என கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர், இது பற்றி போலீசில் புகார் அளித்தார். விரைந்து வந்த அவர்கள் அவரது மனைவியை கைது செய்து சென்றனர்.

விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அவருக்கு சட்டவிரோத தொடர்பு ஏதும் உண்டா? அல்லது கணவரான தன்னுடைய ரூ.4 கோடி காப்பீட்டு தொகையை பெறுவதற்காக இதனை அவர் செய்திருக்கிறாரா? என தனக்கு தெரியவில்லை என கணவர் கூறுகிறார்.

சமீபத்தில், வங்கியில் அவர்களுக்கான தனி கணக்கில் பீட்டர்ஸ் செலுத்தும் பணமும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனையும் அவருடைய கணவர் கவனித்து போலீசாரிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.