இறந்த நபர்.. அவரது வங்கி கணக்கில் பணம் எடுக்கலாமா? சட்டம் என்ன சொல்லுது?
ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தால் தவறா என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
வங்கி கணக்கு
ஒரு மனிதன் எதிர்பாராத நிலையிலோ அல்லது வயது மூப்பின் காரணமாகவோ இறந்து விடும்பொழுது, அவருடைய இறப்புக்கு பிறகு வங்கிக் கணக்கிலிருந்து அவருடைய உறவினர்கள் ஏடிஎம் வாயிலாக பணத்தை எடுக்கின்றனர்.
ஆனால், Fixed Deposit முறையில் சேர்த்து வைத்த பணத்தை அவர்களால் எடுக்க முடியாது. அரசு விதிகளின்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய கணக்கில் இருக்கும் பணத்தை காசோலையாகவோ அல்லது ஏடிஎம் கார்டு மூலமாக எடுப்பது தவறு.
சட்டப்படி குற்றமா?
இறப்பு சான்றிதழோடு, நாமினிக்கள் அனைத்து ஆவணங்களையும் வங்கியில் ஒப்படைக்கும் பட்சத்தில் அந்த பணத்தை வங்கியில் இருந்து பெறமுடியும். ஒருவர் வங்கி கணக்கை தொடங்கும் பொழுது தனக்கென நாமினியை நியமிக்காமல் இருந்தால்,
அவர் இறந்த பிறகு Legal Heir எனப்படும் வாரிசு சான்றிதழை, இறப்பு சான்றிதழோடு இணைக்க வேண்டும்.
வாரிசுகள் அனைவரும் உறுதி மொழி ஏற்ற பிறகு அவர்கள் இறந்தவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.