லீவு முடிச்சி 3 நாள் ஆபிஸ் வரணும் ...இல்லனா..?? ஊழியர்களுக்கு செக் வைக்கும் IT நிறுவனங்கள்!!

Wipro India
By Karthick Nov 09, 2023 04:48 AM GMT
Report

இந்த புதிய கொள்கையை பின்பற்றாவிட்டால் வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Wipro அதிரடி

இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான wipro நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள மெயிலில், கலப்பின வேலை மாதிரியை நோக்கிய நகர்வு, நேருக்கு நேர் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், விப்ரோவின் நிறுவன கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், மேலும் பயனுள்ள தகவல் தொடர்புகளை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி ஜாலி தான்.. இந்த 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை!

இனி ஜாலி தான்.. இந்த 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை!

இந்த மெயிலை அந்நிறுவனத்தின் தலைமை HR சௌரப் கோயல் அனுப்பியுள்ளார். இந்த புதிய அலுவலக விதியை அனைத்து அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் வரும் ஜனவரி 7, 2024 முதல் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது அதாவது வேலை நீக்கம் போன்ற விஷயங்களையும் வீணாக சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

wipro-all-should-come-to-office-for-atleast-3-days

முன்னணி நிறுவனத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தும் நிலையில், இது படிப்படியாக அனைத்து நிறுவங்களுக்கும் குறிப்பாக IT துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல நிறுவனங்களும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அலுவலக வேலை என்ற கலாச்சாரத்திற்கு முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில், சில நிறுவனங்கள் மட்டும் Work From Home மற்றும் Work From Office என்ற இரண்டு முறையையும் பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.