கேன்சர் செல்லினை 99% அழிக்கும் புதியமுறை - ஆராய்ச்சியில் தகவல்
கேன்சர் செல்லினை அழிக்கும் புதிய முறை கண்டறியப்பட்டுள்ளது.
கேன்சர் செல்
கேன்சர் என்பது இன்றளவும் பலரின் மனதில் ஒரு உயிர்க்கொல்லி நோயாகதான் கருதப்படுகிறது. சில மருந்துகள் செயல்பட்டாலும் முழுமையாக கேன்சரினை குணப்படுத்த முடிவதில்லை.
இந்நிலையில், கடந்த வருடம் அமெரிக்காவில் நடைப்பெற்ற சோதனையில் 18 குடற் புற்றுநோயாளிகளுக்கு எந்தவொரு கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கமால் எளியமுறையில் dostarlimab என்ற மருந்தினை பயன்படுத்தியே கேன்சரினை முழுமையாக குணப்படுத்தினார்கள்.
புதிய கண்டுபிடிப்பு
MRI,PET எனப்படும் positron emission tomography அனைத்து சோதனைகளிலும் கேன்சர் செல்கள் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த சோதனை குறைந்த அளவே மேற்கொள்ளப்படது.
தற்போது ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைகழகம் ஆகியவற்றின் நிபுணர்களை கொண்ட கூட்டுக்குழு புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கான ஒரு முறையை கண்டுபிடித்துள்ளனர்.
ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறுகளை அதிரவைத்து கேன்சர் செல்களை கொல்லும் மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்த மூலக்கூறுகள் போடும் நடனம் காரணமாக புற்றுநோய்செல்கள் பலியாகிவிடும் என்கிறார்கள். இந்த முறை மூலம் கேன்சர் செல்களை 99% அழிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.