மாணவர்கள் கவனத்திற்கு..15 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு
குளிரின் தாக்கத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிரின் தாக்கம்
வட இந்திய மாநிலங்களில் இரண்டு மூன்று மாதங்களுக்கு குளிரின் தாக்கம் இருக்கும். இந்த டிசம்பர் மாத இறுதியில் அரையாண்டு தேர்வுகளை நடத்தி முடித்து விட்டு 10 முதல் 15 நாட்கள் வரை விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜனவரி 1, 2024 முதல் ஜனவரி 15, 2024 வரை குளிர்கால விடுமுறை விடப்படுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
உத்தரப் பிரதேச மாநிலத்தை எடுத்துக் கொண்டால் டிசம்பர் 31, 2023 முதல் ஜனவரி 14, 2024 வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 1, 2024 முதல் ஜனவரி 6, 2024 வரை ஆறு நாட்களுக்கு மட்டும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் ஏற்கனவே விடுமுறை விடப்பட்ட நிலையில், டிசம்பர் 24 முதல் டிசம்பர் 31 வரை 8 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5, 2024 வரையிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் 26 முதல் 31 வரையிலும்,
ஜம்முவில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல், குளிரின் தாக்கம் காரணமாக பிப்ரவரி 29 வரை விடுமுறை நீட்டிக்கப்படும் எனவும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.