குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு - இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
குளிர்காலத்தில் இதய நோய் பாதிப்பு அதிகரிப்பது வழக்கம்.
குளிர்காலம்
குளிர்காலத்தில் இதய நோய் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
மார்பின் இடது பக்கத்தில் ஏற்படும் வலியானது குளிர்காலத்தில் இரத்த நாளங்கள் சுருங்கும்போது ஏற்படும். இதனை கவனிப்பது மிக அவசியம். குளிர்காலங்களில் காலை நேரத்தில் மார்பு பகுதியில் அசௌகரியம் அதிகரிக்கலாம்.
மாரடைப்பு அறிகுறிகள்
மார்பில் வலி, இறுக்கம் அல்லது அழுத்தம் போன்றவை ஏற்படும். மூச்சு திணறல் ஏற்படும். தொடர்ந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மருத்துவரை அனுகுவது நல்லது. இரவு நேரத்தில் நல்ல தூக்கம் இருந்தபோதிலும், காலையில் அதிக சோர்வாக இருப்பதும் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும், தலைச்சுற்றல் போன்ற உணர்வு இருந்தால் கவனம் தேவை. ஏனெனில் இது மூளைக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாததை குறிக்கிறது. அதோடு அதிகமாக குமட்டல், வியர்த்துக்கொண்டே இருந்தாலும் கவனம் தேவை.
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, படபடப்பு போன்ற உணர்வுகள் இருந்தால் உடனாக மருத்துவரை சென்று பாருங்கள்.