குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிக்கும்போது நாம் செய்யும் தவறு எது தெரியுமா?

lifestyle-health
By Nandhini Dec 21, 2021 06:50 AM GMT
Report

பொதுவாக குளிர்க்காலத்தில் சூடு தண்ணீரில் தலைக்கு குளிக்கும் பழக்கம் நாம் அனைவருக்கும் இருக்கிறது. குளிர்காலத்தில் நம்முடைய சருமமும், முடியும் பாதிப்பு அடையும். முடி சேதமடைவது, பொடுகு செதில்கள் உருவாவது போன்றவை பொதுவான பிரச்சனைகளாகும்.

எனவே ஆரோக்கியமான முடியை பெற, நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் நாம் செய்யும் சில விஷயங்கள் நமது முடியை சேதப்படுத்திவிடும். முடி உதிர்வை அதிகரிக்கும்.

வெந்நீரில் குளிப்பது

பொதுவாக குளிர்க்காலத்தில் நாம் சூடு தண்ணீரில் குளிப்போம். வெந்நீரில் குளிப்பது சூடாகவும், இதமாகவும் இருக்கும். ஆனால் வெந்நீரில் குளிப்பதால், முடியின் வேர்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் இயற்கையான எண்ணெய் சுரப்புகள் பாதிக்கப்படுகிறது.

ஸ்டைலிங்

குளிர்காலத்தில் ஸ்டைலிங் கருவிகள் உங்கள் தலைமுடியை அழகாக்கும் அதே நேரத்தில், இது உங்கள் முடியை வெப்பமடைய செய்து விடும். தலைமுடியை தினமும் ஸ்டைல் ​​செய்வதால், ஈரப்பதம் இழப்பு, முடி உதிர்தல் மற்றும் நுனி முடி பிளவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது. இது உங்கள் தலைமுடி உதிர்வை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஈரமான கூந்தலுடன் வெளியே செல்வது -

குளிர்காலத்தில் சில நேரங்களில் முடியை உலர்த்தி, ஈரமான கூந்தலுடன் வெளிய செல்கின்றனர். ஆனால் குளிர்காலத்தில் வீசும் காற்று உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை இதன் மூலம் இழைகளை பிரித்து, உடைவது, பிளவுகள் மற்றும் உரித்தல் ஆகியவை அதிகரிக்கும்.

டவல் -

குளிர்காலத்தில் தலைமுடியை உலர்த்தப் பயன்படுத்தப்படும் டவல் மென்மையானதாக இருக்க வேண்டும். தலைமுடியைக் காய வைக்கும்போது, டவலால் அழுத்தித் துடைக்க கூடாது. இதனால், முடி கடினமாகிப் பொலிவு இழந்துவிடும். உடைபட வாய்ப்பு அதிகம் உள்ளது. டவலால் ஒத்தி எடுத்து, கைவிரல்களால் கோதி, காய வைக்க வேண்டும். 

குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிக்கும்போது நாம் செய்யும் தவறு எது தெரியுமா? | Lifestyle Health