வெற்றி வாய்ப்பு இருந்தால் தான் சீட்..!! அழுத்தமாக சொன்ன பொதுசெயலாளர்..!

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami
By Karthick Jan 11, 2024 12:31 PM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக கட்சிகள் மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அதிமுக

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நெருக்கடியில் உள்ளது. அதே நேரத்தில் பிரதமர் வேட்பாளர் இன்றி தேர்தலை சந்திப்போம் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

winning-candidates-only-be-selected-edapadi-says

இந்த நிலையில், தான் அண்மையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு பணியில் இருக்கும் படி அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்தன.

வெற்றி வாய்ப்பு...

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டு, ஆனால் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே கட்சியில் சீட் கொடுக்கப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

winning-candidates-only-be-selected-edapadi-says

மேலும், திமுக அரசு சென்னையில் பெய்த மழையினை படிப்பினையாக கொண்டிருந்தால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வெள்ளத்தினை சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்று கூறி,

கரை வேட்டி - இரட்டை இலை இல்லை..! நீதிமன்ற தீர்ப்பு - கேள்விக்குறியான ஓபிஎஸ் எதிர்காலம்..!

கரை வேட்டி - இரட்டை இலை இல்லை..! நீதிமன்ற தீர்ப்பு - கேள்விக்குறியான ஓபிஎஸ் எதிர்காலம்..!

ஆனால் அந்த நேரதில் திமுக டெல்லியில் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது என்றும் விமர்சித்தார்.