கரை வேட்டி - இரட்டை இலை இல்லை..! நீதிமன்ற தீர்ப்பு - கேள்விக்குறியான ஓபிஎஸ் எதிர்காலம்..!
இன்று வெளியான தீர்ப்பினை அடுத்து ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் கேள்விகுறையான ஒன்றாக மாறியுள்ளது.
ஓபிஎஸ் வழக்கு
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்திவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
எதிர்காலம்
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வாதங்கள்நிறைவடைந்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில், அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனிநீதிபதியிடம் மீண்டும் முறையிட அறிவுறுத்தியுள்ளனர்.