காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் - தூய்மை செய்த கவர்னர் ரவி கொந்தளிப்பு!
காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள் இருப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கவர்னர் ரவி
நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் 'தூய்மை பாரதம்' என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் காந்தி மண்டபத்தில் மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டார். அவர், நாளை (அக்.,02) காந்தி ஜெயந்தியையொட்டி, வாளியில் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தார்.
கொந்தளிப்பு..
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவர்னர் ரவி கூறியதாவது: மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; அவர் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.
காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது. சுத்தம் என்பது பழக்கம்; சுத்தம் இல்லாததால் பல நோய்கள் பரவுகின்றன. அன்றாட வாழ்வில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.