போதைப் பொருள்..பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் அவசியம் - ஆளுநர் ரவி அறிவுரை!

Tamil nadu R. N. Ravi Chennai
By Swetha Aug 30, 2024 01:30 PM GMT
Report

போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பதால் பிள்ளைகள் மீது கவனம் அவசியம் என ஆளுநர் ரவி பேசியுள்ளார்.

ஆளுநர் ரவி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ கல்லூரியில், போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

போதைப் பொருள்..பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் அவசியம் - ஆளுநர் ரவி அறிவுரை! | Governor Rn Ravi Advices Over Increase In Drug Use

அப்போது பேசிய அவர், “நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் நாட்டின் நாளைய பெண் தலைவர்களை என் முன்னால் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் எதிர்காலமாக பெண்கள் இருக்கின்றனர். பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

போதைப் பொருட்கள் தனி மனிதனை சீரழிப்பதோடு, அவனது குடும்பத்தையும் நாட்டையும் சீரழிக்க கூடிய வகையில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து மில்லியன் டன் கணக்கில் கடத்தப்படும் போதை பொருட்களை தமிழகம்,

அந்த காலத்தில் ஜாதி இல்லை பிராமணர் சூத்திரர் போன்ற பிரிவுகள் தான் இருந்தது - ஆளுநர் ஆர்.என்.ரவி

அந்த காலத்தில் ஜாதி இல்லை பிராமணர் சூத்திரர் போன்ற பிரிவுகள் தான் இருந்தது - ஆளுநர் ஆர்.என்.ரவி

போதைப் பொருள்

கேரளா கடலோர பகுதிகளில் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்கான சின்டிக்கேட் தமிழ்நாட்டிலும் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கான என்ஜினாக தமிழகம் விளங்குகிறது. இங்கு கஞ்சா தடை செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கின்றனர்.

போதைப் பொருள்..பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் அவசியம் - ஆளுநர் ரவி அறிவுரை! | Governor Rn Ravi Advices Over Increase In Drug Use

இதனால் இதுபோன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்வதால் தான் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறினால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கண்டிப்பாக குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். இன்று போதைப் பொருட்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கிறது. அதன் தேவை உருவாகுவதன் காரணமாக மிகப்பெரிய வணிகமாக உலக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

போதை பொருட்கள் பிரச்சனை என்பது எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அது மிகப்பெரிய பிரச்சனை. நாம் போதை பொருள் புழக்கத்தை குறைக்க நினைக்க கூடாது. அதை முற்றிலும் வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.