மாதவிடாய் அசெளகர்யம்: இனி வீராங்கனைகள் இதை அணியலாம் - விம்பிள்டன் விதி!
வெள்ளைநிற உடை விஷயத்தில் சில தளர்வுகளை விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அமைப்பு அறிவித்துள்ளது.
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பலவித பாரம்பரியமான வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர்.
ஸ்கர்ட், ஹார்ட்ஸ் மற்றும் டிராக்கூட்கள் அனைத்தும் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும். வெள்ளை என்பது அரை வெள்ளை அல்லது கிரீம் வெள்ளை என்றால் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஆடை தளர்வு
இந்நிலையில், மாதவிடாய் காலத்தில் சுத்தமான வெள்ளைநிற ஷார்ட்ஸ் அணிவதால் போட்டியில் முழுகவனம் செலுத்தி விளையாட முடியவில்லை என டென்னிஸ் வீராங்கனை தொடர்ந்து ட்விட்டர் வாயிலாக புகார் அளித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, உடை விஷயத்தில் சில தளர்வுகளை விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி இனி விம்பிள்டனில் வீராங்கனைகள் விளையாடும் போது, தாங்கள் விரும்பிய நிறத்தில் ஷாட்ஸ்களை அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.