விம்பிள்டனிலும் "வாத்தி கம்மிங்" : விளக்கம் தேடிய வெளிநாட்டினர், குஷியில் தமிழர்கள்
டென்னில் துறையில் பிரபலமான தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடராகும் , இந்த தொடர் லண்டனில் உள்ள விம்பிள்டன் நகரில் நடக்கும்.இந்த தொடருக்கு உலகின் தலைசிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள்.
தொடங்க உள்ள விம்பிள்டன் டென்னிஸ்
" உன் வாயை மூடிகிட்டு பேட்டிங் பண்ணு , மைதானத்தில் கடுப்பான விராட்கோலி : நடந்தது என்ன?
அந்த வகையில் இந்த தொடரில் சிறப்பு விருந்தினராக முன்னாள் விம்பிள்டன் ஜாம்பியனும் உலகின் தலைசிறந்த டென்னிஸ் ஃபிளேயரில் ஒருவரான ரோஜர் பெடர் வந்துள்ளார். அவரது வருகையினை தனது விம்பிள்டன் அதிகாரப்பூர்வ முக நூல் பக்கத்தில் ரோஜர் பெடர் வந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து “வாத்தி கம்மிங்” என்று கேப்ஷனோடு பதிவிட்டுள்ளது.
வைரலாகும் வாத்தி கம்மிங்
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் இந்தியா முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்து இணையத்தில் வைரலானது இந்த நிலையில், வாத்தி கம்மிங் வரிகள் பதிவிட்டு விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வந்துள்ளதை இந்தியர்களும், தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம் இந்த பேஸ்புக் தளத்தின் அட்மின் ஒரு தமிழர் என முகநூல் வாசிகள் comment செய்து வருகின்றனர், மேலும் வெளிநாட்டினர் சிலர் வாத்தி கம்மிங் கேப்ஷனுக்கு அர்த்தமும் தேடியுள்ளனர்.
எது எப்படியோ தமிழகத்தில் உருவான ஒரு படத்தின் பாடல் தற்போது லண்டனிலும் ஹிட் அடித்துள்ளது .

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.