" உன் வாயை மூடிகிட்டு பேட்டிங் பண்ணு , மைதானத்தில் கடுப்பான விராட்கோலி : நடந்தது என்ன?
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களை குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களை குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது.
ஆவேசமான விராட் கோலி
அப்போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த பார்ஸ்டோ விராட்கோலியிடம் ஏதோ ஆவேசமாக வார்த்தைகளை கூறினார். இதனால், கோபமடைந்த விராட்கோலி வேகமாக பார்ஸ்டோவை நோக்கிச் சென்றார்.
தோனியை மிஞ்சிய ரிஷப் பண்ட் : எதில் தெரியுமா?
அப்போது, பார்ஸ்டோ விராட்கோலியின் தோளில் தட்டி பீல்டிங் செய்யுங்கள் என்பது போல சைகை காட்டினார். அதற்கு பதிலடி தரும் விதமாக விராட்கோலி முதலில் நீ சென்று பேட்டிங் செய் என்றார். பின்னர், பீல்டிங் பகுதிக்கு சென்ற விராட்கோலி பார்ஸ்டோவை பார்த்து வாயை மூடிக்கொண்டு பேட்டிங் செய் என்றார்.
It's tense out there between Virat Kohli and Jonny Bairstow ?#ENGvIND pic.twitter.com/3lIZjERvDW
— Sky Sports Cricket (@SkyCricket) July 3, 2022
பின்னர், நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர், இதனால், களத்தில் பரபரப்பு ஏற்பட்டது, மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் விராட்கோலிக்கு ஆதரவாக கரகோஷத்தை எழுப்பினர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.