தடை அதை உடை புது சரித்திரம் படை : அன்று யுவராஜ் , இன்று பும்ரா
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 338 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று 2-நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
சாதனை படைத்த பும்ரா
இந்த டெஸ்டில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியது. ஜடேஜா-பண்ட் ஆகியோர் சாதனைகள் படைத்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவும் தனது பங்கிற்கு பேட்டிங்கில் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை எட்டினார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.
h
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இந்த 35 ரன்கள் தான். தனிப்பட்ட வீரரை பொறுத்தமட்டில் பும்ரா இந்த ஓவரில் அடித்த 29 ரன்கள் தான் ஒரு ஓவரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்
அன்று யுவராஜ் இன்று பும்ரா
இதற்கு முன் ஒரே ஓவரில் பிரயன் லாரா, ஜார்ஜ் பெய்லி மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகிய மூவரும் தலா 28 ரன்கள் அடித்துள்ளனர். அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
இதேபோல் 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் பிராட் வீசிய ஓவரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 36 ரன்கள் குவித்தார் என்பது குறிபிடத்தக்கது