நீண்டகால போட்டி..நாங்களும் மனுஷங்கதான் - விராட் கோலி குறித்து வில்லியம்சன் உருக்கம்

Virat Kohli Indian Cricket Team Kane Williamson
By Sumathi Jun 03, 2025 01:30 PM GMT
Report

விராட் கோலியின் திடீர் ஓய்வு குறித்து வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

kane williamson - virat kohli

மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு, அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அந்த வகையில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

அப்படி இருக்கையில், 36 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது பலரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன், "இங்கே ஒரு முடிவு இருந்தாக வேண்டும்.

ஐபிஎல் 2025 கோப்பையை 'இந்த' அணி தான் வெல்லும் - Grok, Gemini, ChatGPT ஒரே கணிப்பு

ஐபிஎல் 2025 கோப்பையை 'இந்த' அணி தான் வெல்லும் - Grok, Gemini, ChatGPT ஒரே கணிப்பு

வில்லியம்சன் கருத்து 

ஏனெனில் ஓய்வுக்கு முன்பு நீங்கள் பயணத்தில் இருக்கிறீர்கள். அந்தப் பயணத்தில் உங்களுக்கு நாட்டம் இருக்கும். ஆனால் அது மற்ற மூவருக்கும் தொடர்பை ஏற்படுத்தாது. நாங்கள் அனைவரும் ஒரே சமயத்தில் விளையாடி வருகிறோம். ஒருவருக்கொருவர் நீண்ட காலம் போட்டியிட்டு வரும் நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துள்ளோம்.

நீண்டகால போட்டி..நாங்களும் மனுஷங்கதான் - விராட் கோலி குறித்து வில்லியம்சன் உருக்கம் | Williamson On Virat Kohlis Sudden Retirement

எனவே அந்த ஓய்வில் நீங்களும் கொஞ்சம் பிரதிபலிப்பீர்கள். விராட் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவருடன் நீண்ட காலமாக பேசியுள்ளேன். அதே சமயம் நாங்கள் கிரிக்கெட்டர்கள் மட்டுமல்ல மனிதர்களும்தான். எனவே எங்களுடைய வாழ்க்கையும் மாறக்கூடியது என்பதை நீங்கள் உணர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.