வருங்கால அரசியலில் ஓபிஎஸ்’ஸுடன் இணைந்து செயல்பாடுவேன் - டிடிவி தினகரன்..!
இனி வரும் காலங்களில் தானும் ஓபிஎஸ்’ஸும் இணைந்து செயல்படப்போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சேர்ந்து செயல்பட...
இன்று அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அவரின் திருவுறுவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், வருங்கால அரசியலில் தானும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்து, சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றார்.
பாஜக திணிப்பதில்லை
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், தமிழ்நாடு நலனுக்கு எதிராக செயல்படும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கபோவதில்லை என உறுதிப்பட தெரிவித்து, மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் , மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை முன்பு தமிழ்நாட்டில் பாஜக அரசு திணித்ததாக குறிப்பிட்டு ஆனால், தற்போது அது போன்ற திட்டங்களை திணிப்பதில்லை என்றும் பேசினார்.
மழை வெள்ள்த்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரணத்தை நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.