தேனி தொகுதியை குறிவைக்கிறாரா டிடிவி..? ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன..?
வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணி கணக்குகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
டிடிவி - ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் அதிமுகவை மீட்கும் நோக்கில் தனி கட்சி துவங்கியுள்ள டிடிவி தினகரன், வரும் நாடாளுமன்ற தேர்தலை சேர்ந்த தான் சந்திக்கபோகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
அவர்கள் திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனே தான் தங்களது கூட்டணியை இவர்கள் தொடருவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், தான் இவர்கள் எந்த தொகுதியை பெரும்பாலும் குறிவைப்பார்கள் என்ற கேள்விகள் எழ துவங்கியுள்ளன.
தேனி தொகுதி
தேனி பகுதி இருவருக்குமே செல்வாக்கான இடம் தான். 2019-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் 40 தொகுதிகளை குறிவைத்து போட்டியிட்ட நிலையில், அதிமுக அந்த தேர்தலில் வெற்றிபெற்றது தேனி தொகுதியில் மட்டும் தான்.
அந்த வெற்றியை சுவைத்தவர் ஓபிஎஸ் மகன் ரவிந்த்ரநாத். இம்முறை ஓபிஎஸ் தனது மகனை முன்னிறுத்தி அத்தொகுதியை குறிவைப்பார் என கூறப்படுகிறது. ஆனால், இங்கு தான் கூட்டணி கணக்கு சற்று விலகுவதாக தெரிகிறது.
கடந்த 1999-ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் களம் கண்ட டிடிவி தினகரன், அப்போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகினார். ஆனால், 2009-ஆம் ஆண்டின் தேர்தலின் போது, பெரியகுளம் தேனி தொகுதியுடன் இணைக்கப்பட்டதால், தற்போது இந்த தேர்தலில் டிடிவி'யின் கவனம் தேனி தொகுதி மீது தான் இருக்கும் ஏன் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தங்களது சாதி வாக்கு அதிகமுள்ள சிவகங்கை தொகுதிக்கு ஓபிஎஸ் மகன் ரவிந்த்ரநாத் மாறுவர் என்றும், அதன்படி இரு தரப்புமே பாஜகவுடன் பேசி சுமுக முடிவை எடுத்துவிட்டதாகவும் தகவல் வெளிவருகின்றன.