தேர்தல் தொகுதி பங்கீடு - அதிரடி முடிவில் முதல்வர்..? இந்தியா கூட்டத்தில் தகவல்..!
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக இந்திய அளவில் பெரும் கூட்டணியை காங்கிரஸ் கட்சி தலைமை உருவாக்கி வருகின்றது.
அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் சார்பில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என பல கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
தொகுதி பங்கீடு.?
மொத்தம் (தமிழகம் +புதுவை) 40 தொகுதிகளில் எவ்வாறு திமுக மற்ற கட்சிகளுக்கு சங்கமில்லாமல் தொகுதி பங்கீடு செய்தளிக்க போகிறது என்பதே தற்போது பெரும் கேள்வியாகவுள்ளது.
மதிமுக ஏற்கனவே பொங்கல் முடிந்த பிறகு தொகுதி பங்கீடு குறித்து விவரம் அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலினும் இதே தகவலை தெரிவித்துள்ளார்.