"இந்தியா" கூட்டணி தலைவர் - மல்லிகார்ஜுன கார்கே தேர்வு..!
இந்தியா கூட்டணியின் கூட்டம் காணொளி கட்சியின் மூலம் நடைபெற்று வருகின்றது.
இந்தியா கூட்டணி
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக இந்திய அளவில் பெரும் கூட்டணியை காங்கிரஸ் கட்சி தலைமை உருவாக்கி வருகின்றது.
இந்த கூட்டணியை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னின்று செய்து வருகின்றார். காங்கிரஸ், ஆம் ஆத்மீ, திமுக, ராஷ்ட்ரியா ஜனதா தளம், ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என பல கட்சிகளும் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
தலைவராக..
முன்னதாக நடைபெற்ற இந்த கூட்டணி கூட்டத்தில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் 19 பேர் கொண்ட பிரச்சாரக் குழு அமைக்கப்பட்டது.
இன்று காணொளி கட்சி வாயிலாக நடைபெற்று வரும் கூட்டத்தில், கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதே போல,"இந்தியா" கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்ததாக தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.