எங்கு நிற்க வைத்தாலும் நான் ஜெயிப்பேன் - பாஜகவின் தலைமைக்கு சரத்குமார் ஹிண்ட்
ச.ம.க மற்றும் பாஜக கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதிசெய்துள்ளன.
பேச்சுவார்த்தை
இன்று சென்னை கமலாலயத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசினார்.
சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் பேசியது வருமாறு,
இன்றைய சந்திப்பு பரஸ்பரமான சந்திப்பு தான் என்று குறிப்பிட்ட சரத்குமார், மீண்டும் 3-வது முறையாக பிரதமராக மோடி தான் வரவேண்டும் என்பதற்காக கடினமான உழைப்பை உத்தரவாதமாக அளித்துள்ளோம் என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேள்வியை எழுப்பிய நிலையில், அதனை குறித்து இன்னும் 2 தினங்களை கழித்து இரு கட்சிகளும் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்றார். அவரிடம் மீண்டும் நீங்கள் திருநெல்வேலி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவீர்களா..? என்று வினவப்பட்ட போது, கூடிய விரைவில் அறிவிப்பேன் என்று கூறினார்.
ஆனால், தன்னை எங்கு நிற்கவைத்தாலும், தான் நிச்சயம் என்பேன் என்றும் சரத்குமார் கூறினார்.