மாமியார் கேட்கிறார் எப்போது முதல்வர் ஆவேன் என்று..? ச.ம.க தலைவர் சரத்குமார்!!
திருநெல்வேலியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், வரும் 2026-ஆம் ஆண்டில் தான் முதலமைச்சராக பதவியேற்பேன் என தெரிவித்துள்ளார்.
சரத்குமார் உரை
சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் திருநெல்வேலியின் கேடிசி நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆற்றிய சிறப்புரையில், கடந்த 56 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் சென்னையில் நீர்த்தடங்களை சிறப்பாக செயல்படுத்தவில்லை என்றும் பராமரிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தான் அரசியலில் இருந்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று இல்லை என்றும் அதில் தான் உறுதியோடு இருக்கிறேன் என்ற சரத்குமார், நீங்கள் நிச்சயமாக 2026-இல் முதலமைச்சர் தான் என என் மனைவி சொன்னார்கள் என கூறினார்.
மாமியாரின் கேள்வி
சமீபத்தில், கீழே விழுந்து அடிபட்ட என் மாமியார் காண சென்றபோது 85 வயதாகும் அவர், ஐயா நான் உங்களை எப்போது முதலமைச்சராகப் பார்க்கப்போகிறேன்?" என கேள்வி கேட்டார் என்பதை கூறி, மற்றவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் ஆசை இருக்கும்போது ஏன் எனக்கு வரக்கூடாதா? என்று சரத்குமார் வினவினார்.
எனக்கு அந்த ஆசை வந்தால் காமெடி, மற்றவர்களுக்கு வந்தால் சீரியஸா? என்ற அவர், நான் சீரியஸாகத் தான் சொல்கிறேன் என்று உறுதிபட தெரிவித்தார்.
உழைப்பு, உறுதி, நியாயம், தர்மம் ஆகியவை சேர்ந்து இருக்கிறது என்றும் வெற்றி நிச்சயமாக வரும் என தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சியின் சகோதரர்கள் இனியும், கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதைவிட தாங்கள் கடுமையாக உழைத்தால் நம் இலக்கை அடையமுடியும் என உறுதிபட தொண்டர்களிடம் கூறிய சரத்குமார், சரத்குமார் சொல்லிவிட்டார் நாளை மந்திரி ஆகிவிடலாம் என்றில்லாமல், அதற்காக உழையுங்கள் என்றும் உழைத்தால் தான் எதுவும் கிடைக்கும் என்று தொண்டர்களுக்கு அறிவுரை கூறினார்.