கடைசி நேர சிக்கல்? வாக்களிக்க வருவாரா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்??
வாக்காளர்கள் வாக்களிப்பது கடமையாகும்.
தேர்தல்
நாட்டின் ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் இன்று துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழகம் மற்றும் புதுவை 40 தொகுதிகளை சேர்ந்து நாட்டில் மொத்தமாக 102 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
வாக்கெடுப்பு துவங்கியது முதலே அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும், திரை துறை பிரபலங்களும் வரிசையில் வந்து வாக்களித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு, தமிழிசை என பலரும் தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர்.
கடைசி நேர சிக்கல்
நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்னும் சென்னை வரவில்லை கூறப்படுகிறது.
அரசியலில் களமிறங்கிய விஜய், எப்போது வாக்கெடுப்பிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. GOAT படப்பிடிப்புற்காக விஜய் வெளிநாடு சென்ற நிலையில், அவர் துபாயில் இருப்பதாக ஒரு செய்தி உள்ளது.
துபாயில் தற்போது அதீத கன மழை பெய்துவருவதால், விமான சேவைகள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது அறிந்ததே. இதனால் அவர் வருவது சிக்கலான ஒன்று என கருத்துக்கள் பரவி வருகின்றது.
அதே போல, மற்றொரு செய்தியின் படி, விஜய் ரஷ்யாவில் இருந்ததாகவும், அவர் அண்மையில் சென்னை திரும்பி விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. அவர் வந்து வாக்களிக்கும் வரை இந்த செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கும்.