நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே - ஒன்றாகும் ஓபிஎஸ் இபிஎஸ்..! சசிகலா பரபரப்பு பேட்டி
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து விட வாய்ப்பிருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் இபிஎஸ்
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து கட்சியை மீட்பதிலும், தான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தையும் நாடி வருகின்றார்.
அதே நேரத்தில் பொதுச்செயலாளராகியிருக்கும் இபிஎஸ் கட்சி தேர்தல் பணிகளில் மிக தீவிரம் காட்டி வருகின்றார்.
இவர்கள் இருவரும் அதிமுக குறித்த வெவ்வெறு நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், அதே நேரம் சசிகலா, கட்சியை தான் ஒன்றிணைக்கப்போவதாக தெரிவித்து வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு....
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, கட்சி ஒன்று பட்டால் தான், தேர்தல் நாம் வெற்றி பெற முடியும் என்பதை சாதாரண மக்கள் கூட பேசுவதாக குறிப்பிட்டு, அதற்கான பணியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அந்த ஒன்றிணைதல், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட நடக்கலாம் என நம்பிக்கை தெரிவித்து, தான் எப்போதும் தமிழ்நாடு மக்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் பக்கம் தான் என உறுதிப்பட கூறினார்.