முதல்வருக்கும் - அமைச்சருக்கும் படம் ரிவியூ பண்ண மட்டும் டைம் இருக்கா..? ஜெயக்குமார் விளாசல்..!!

M K Stalin ADMK DMK AIADMK D. Jayakumar
By Karthick Jan 14, 2024 08:18 PM GMT
Report

அண்மையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனுஷ் நடிப்பில் வெளியான "கேப்டன் மில்லர்" படம் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

ஜெயக்குமார் விமர்சனம்

இந்த சம்பவத்தை குறித்து அதிமுக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது இந்த நிர்வாக திறனற்ற திமுக அரசு!

முதல்வருக்கும் - அமைச்சருக்கும் படம் ரிவியூ பண்ண மட்டும் டைம் இருக்கா..? ஜெயக்குமார் விளாசல்..!! | Jayakumar Slams Mk Stalin Udhayanidi Stalin Tweet

தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு!

ஆமை வேகத்தில்....

பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதலமைச்சரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

jayakumar-slams-mk-stalin-udhayanidi-stalin-tweet

முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பேருந்து நிலையம் வந்தடைய மக்கள் நடக்க இயலாமலும் பல மணிநேரமாக காத்திருந்தும் பேருந்து கிடைக்காத அவலமும் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு. மக்கள் படும் பாட்டை எல்லாம் எப்படி பார்ப்பார்கள்!