உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா? இன்று அமைச்சரவை கூட்டம்!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu Chennai
By Swetha Aug 13, 2024 02:51 AM GMT
Report

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 27ம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு முதல்வர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா? இன்று அமைச்சரவை கூட்டம்! | Will Udhayanidhi Stalin Get Deputy Cm Post Today

இந்த நிலையில், இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அவரது வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள்,

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி? தீவிரமாகும் பணி!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி? தீவிரமாகும் பணி!

துணை முதல்வர் பதவி 

தற்போது நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா? இன்று அமைச்சரவை கூட்டம்! | Will Udhayanidhi Stalin Get Deputy Cm Post Today

என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இது குறித்து இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுமா? அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

அன்மையில், பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, வரும் 19-ம் தேதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராகலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.