எதிர்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்படுமா? ஒபனாக சொன்ன திருமாவளவன்!
விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தனது முதல் அரசியல் மாநாட்டை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினர்.
அதில் அவர் பேசிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல கடந்த வாரம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், கூட்டணி அழுத்தம் காரணமாக திருமாவளவன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என கூறினார்.
திருமாவளவன்
இந்த நிலையில், விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்று திருமாவளவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தெரியாது என்று பதில் அளித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் என தெரிவித்த திருமாவளவன்,
எதிர்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு "எனக்கு தெரியாது" என பதில் அளித்தார். அவர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி இல்லை என்று மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.