6 மாதத்தில் திருமாவளவன் இதை செய்வாரா? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி!
6 மாதத்திற்குள் திருமாவளவன் அணி மாறுவாரா? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருமாவளவன்
அண்மை காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, கூட்டணி கட்சியான தி.மு.க.,வுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகிறார். தி.மு.க.,வும் வி.சிகவும் ஒன்றுப்பட செய்லப்பட்டு வருகின்ற நிலையில்,
இவருடைய தன்னிச்சையான செயல்பாடுகளால் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் ஆதவ் அர்ஜூனாவை, கட்சியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழிசை
இது குறித்து தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு இடை நீக்கம் என திருமாவளவன் அறிவித்துள்ளது. 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என தமிழிசை காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த அம்பேத்கர் பற்றி நடந்த புத்தக வெளியீடு நிகழ்வு ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி நடக்கிறது என்பது சினிமா துறையை ஒரு குடும்பம் மறைமுகமாக கட்டுப்படுத்துகிறது என கடுமையாக விமர்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.