பச்சை பால் பாக்கெட் விற்பனை குறைப்பு? ஆவின் நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

Tamil nadu Chennai
By Swetha Oct 18, 2024 12:30 PM GMT
Report

பச்சை நிறம் பால் பாக்கெட் விற்பனை குறைப்பா என்பதற்கு ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

பால் பாக்கெட்

ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டின் அளவைக் குறைத்து விலையை உயர்த்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பது,

பச்சை பால் பாக்கெட் விற்பனை குறைப்பு? ஆவின் நிர்வாகம் கொடுத்த விளக்கம்! | Will The Sale Of Aavin Green Milk Packets Decrease

ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும்,

ஆவின் பால் விலை உயர்வு; இவ்வளவா? அப்போ டீ, காஃபி விலை!

ஆவின் பால் விலை உயர்வு; இவ்வளவா? அப்போ டீ, காஃபி விலை!

ஆவின் நிர்வாகம்

பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது.

பச்சை பால் பாக்கெட் விற்பனை குறைப்பு? ஆவின் நிர்வாகம் கொடுத்த விளக்கம்! | Will The Sale Of Aavin Green Milk Packets Decrease

மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.