ஆவின் பால் விலை உயர்வு; இவ்வளவா? அப்போ டீ, காஃபி விலை!
5 லிட்டர் ஆவின் பச்சை பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
ஆவின் பால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பால் அவசியான உணவு பொருட்களில் ஒன்றாக உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது.
விலை உயர்வு
இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் ஆரஞ்சு நிறத்திலும், டீ மேட் - கொழுப்புச் சத்து நிறைந்த பால் சிவப்பு நிறத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 5 லிட்டர் கொள்ளவு கொண்ட பச்சை பாலின் விலை ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ரூ.210 ஆக விற்பனையாகி வரும் நிலையில், இனி ரூ.220க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரை லிட்டர், ஒரு லிட்டர் என வாங்கும் இல்லத்தரசிகளை பாதிக்காது என்றாலும் வணிக ரீதியாக வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.