வாக்குகள் குறைந்தால்....நடவடிக்கை!! வெற்றி தான் இலக்கு..! கடுமை காட்டும் குழுவினர்..!
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை குறி வைத்து திமுக நிர்வாகிகள் பணி ஆற்றுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், திமுக அதிமுக பாஜக என அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இன்று சென்னை அறிவாலயத்தில், திமுக சார்பாக ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை தொடங்கியுள்ளது.
வாக்குகள் குறைந்தால்...
திமுக ஒருங்கிணைப்புக் குழுவினர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணியாற்றும் படியும், தேர்தலில் வாக்குகள் குறைந்தால் பொறுப்பு அமைச்சர் தொடங்கி- ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழுவினர் எச்சரித்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.