தொப்பூர் கணவாயில் பயங்கர விபத்து; 4 பேர் பலி - முதலமைச்சர் நிதியுதவி!

M K Stalin Accident Death Dharmapuri
By Sumathi Jan 25, 2024 06:33 AM GMT
Report

தொப்பூர் கணவாய் கார் விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

4 பேர் பலி

தர்மபுரி, தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இரட்டை பாலம் பகுதியில் தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது.

toppur-kanavai accident

அதில், லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்தது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 4 பேரி உயிரிழந்துள்ளனர்.

கார் விபத்தில் சிக்கிய மம்தா பானர்ஜி - மருத்துவமனையில் அனுமதி!

கார் விபத்தில் சிக்கிய மம்தா பானர்ஜி - மருத்துவமனையில் அனுமதி!

நிதியுதவி அறிவிப்பு

தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்குத் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

cm stalin

மேலும், உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் டவுன்ஹால், அசோக் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23) ஜெனிபர் (29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.