திமுக எம்.எல்.ஏ. மகன் கார் விபத்தில் உயிரிழப்பு - அதிர்ச்சி
ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷ் மகன் கருணா சாகர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் திமுக எம்.எல்.ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர் உட்பட 7 பேர் கார் விபத்தில் உயிரிழந்தனர். பெங்களூரு கோரமங்கலா பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் உயிரிழந்தார்.
நள்ளிரவில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆடி சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானதில் உடன் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.