பிச்சை எடுத்தாவது தேர்தலில் போட்டியிடுவேன் - மன்சூர் அலி கான் அதிரடி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன் என மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலி கான்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கமாகி இருக்கும் நிலையில், பிரபல நடிகர்களை பலரை தொடர்ந்து வில்லன் நடிகர் மன்சூர் அலி கானும் அரசியல் களம் கண்டுள்ளார்.
"தமிழ்த்தேசிய புலிகள்" என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த அவர் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என மாற்றியுள்ளார்.
பிச்சை எடுத்தாவது...
நேற்று சென்னை பல்லாவரத்தில் தனது கட்சியின் அறிமுகக் கூட்டம் மற்றும் முதல் மாநாட்டை நடத்தினர் மன்சூர் அலி கான்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் கட்சி மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழர் நலனில் அக்கறைகொண்டு செயல்படும் என்று உறுதிபட தெரிவித்து, கட்சியில் தற்போது 15ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மடிப்பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன் என ஆணித்தரமாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி, எளியவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே தங்களின் நோக்கம் என்றும். கூறினார்.