டிடிவி போட்டியிட்டால்..எதிர்த்து போட்டியிடுவேன் - மன்சூர் அலி கான் அதிரடி.!
வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்திலும் கூட்டணி கணக்குகள் சூடுபிடித்துள்ளது.
டிடிவி தினகரன்
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் - ஓபிஎஸ் அணி கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கபோவது உறுதியான விஷயமாக இருந்தாலும், அவர்கள் பாஜக கூட்டணியில் இடம்பெறுவர்களா..? என்ற கேள்வியும் உள்ளது.
திமுக - அதிமுக எதிர்ப்பில் இருக்கும் இருவரும் நிச்சயமாக பாஜக கூட்டணிக்கு செல்வார்கள் என்று அரசியல் வல்லுநர்கள் கணக்கு போட்டு வரும் சூழலில், இருவரும் இன்னும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிவிக்கவில்லை.இந்நிலையில், அண்மையில் மன்சூர் அலி கான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மன்சூர் அதிரடி
அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தேனீ தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நிச்சயமாக தான் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
1999-ம் ஆண்டு புதிய தமிழகம் சார்பில், கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரால் வெற்றி பெற்றார்.
ஆனால் அவரை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும்.
நான் அவரது மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். எப்படி ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, அவரிடம் நயவஞ்சகம் செய்து, மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து ஜெயலலிதாவை நாடகமாடி,
ஆளுநர் உட்பட யாரையும் பார்க்கவிடாது மாய்த்த கொடூரத்தை எடுத்து சொல்ல, மக்களோடு மக்களாக நின்று 1999-ம் ஆண்டு, நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். இது சத்தியம். எந்த ஆளான கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி என உறுதியுடன் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.